Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சில்லி பாயின்ட்

* துலீப் டிராபியில் அரை சதம் விளாசிய மிக இளம் வயது வீரர் என்ற சாதனை வைபவ் சூரியவன்ஷி (15 வயது, 157 நாள்) வசமாகி உள்ளது. முன்னதாக, 1969 ஜனவரியில் மத்திய மண்டல அணிக்காக விளையாடிய லக்‌ஷ்மண் சிங் (16 வயது, 23 நாள்) படைத்த சாதனையை வைபவ் நேற்று முறியடித்தார்.

* இந்திய வீரர் மயாங்க் அகர்வால், இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்டி சாம்பியன்ஷிப் போட்டியில் துர்ஹாம் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகி உள்ளார்.

* மான்ட்ரியல் கால்பந்து கிளப் அணியுடனான போட்டியில் நட்சத்திர வீரர் மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மயாமி அணி 7-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. மெஸ்ஸி 4 கோல் போட்டதுடன், சக வீரர் கோல் போட ஒரு அசிஸ்ட் செய்தும் அசத்தினார்.

* பாகிஸ்தான் அணியுடன் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 2வது டெஸ்டில் 194 ரன் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இங்கிலாந்து 290 & 208; பாகிஸ்தான் 110 & 194. ஆட்ட நாயகன்: ஆலிவர் ராபின்சன் (4/11 & 4/24). கடைசி டெஸ்ட் பர்மிங்காமில் செப்.9ல் தொடங்குகிறது.