Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சில்லி பாயின்ட்…

* மகளிர் உலக கோப்பை ஹாக்கி தொடரில் அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் நம்பர் 1 அணியான நெதர்லாந்தை எதிர்கொண்ட அர்ஜென்டினா ஆட்ட நேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா செய்ய, பெனால்டி ஷூட் அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. அதில் அர்ஜென்டினா 3-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தி 16 ஆண்டுகளுக்குப் பிறகு உலக கோப்பையை முத்தமிட்டது.

* லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணிக்கு 389 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 290 ரன், பாகிஸ்தான் 110 ரன் எடுத்தன. 180 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 208 ரன்னில் ஆல் அவுட்டானது. இதைத் தொடர்ந்து 389 ரன் இலக்கை துரத்திய பாகிஸ்தான் 4ம் நாள் உணவு இடைவேளையின்போது 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன் எடுத்திருந்தது.

* ஆசிய விளையாட்டு போட்டித் தொடரின் ஆண்கள் 5000 மீட்டர் மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்க இருந்த இந்திய வீரர் அபிஷேக் பால், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். அவரது ரத்த மாதிரியில் தடை செய்யப்பட்ட மகளிருக்கான கருத்தரிப்பு மருந்து குளோமிஃபீன் மிகக் குறைந்த அளவில் இருப்பது கண்டறியப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அபிஷேக் பாலிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

* இந்தோனேசியாவில் நடைபெற்ற போன்டியனாக் சர்வதேச சேலஞ்ச் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை தன்வி பத்ரி (15 வயது) சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். பைனலில் தென் கொரியாவின் மின் சுன் கிம் உடன் நேற்று மோதிய தன்வி பத்ரி 21-5, 21-6 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை கைப்பற்றினார். இப்போட்டி 32 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. தன்வி வென்று முதல் சர்வதேச சாம்பியன் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.