* ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வீரர் ஆசிப் கானுக்கு 15 மாத தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை செப். 8, 2025 முதல் 2026, டிச.7 வரை அமலில் இருக்கும். ஆசிப் கான் பாகிஸ்தானில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
* இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் 2வது டெஸ்ட், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த பாபர் ஆஸம், பாகிஸ்தான் அணி கேப்டனாக மீண்டும் களமிறங்கினார். டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச, இங்கிலாந்து 31 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்திருந்தது.
* உலக கோப்பை ஹாக்கி (மகளிர்) தொடரில் நேற்று ஜெர்மனியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்தியா 5வது இடம் பிடித்தது.




