Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சில்லி பாயின்ட்…

* பெங்களூருவில் நடைபெற்று வரும் துலீப் டிராபி காலிறுதியில், வட கிழக்கு மண்டல அணிக்கு எதிராக கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 467 ரன் குவித்து ஆல் அவுட்டானது. குஷக்ரா 55, சுதிப் குமார் கராமி 146, ஷாபாஸ் அகமது 167 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய வட கிழக்கு மண்டலம் 111 ரன்னில் சுருண்டது. கிழக்கு மண்டல பந்துவீச்சில் அபிஜித் சர்கார் 5, ஷாபாஸ் அகமது 3, முகேஷ் குமார், அனுகுல் ராய் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 342 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய கிழக்கு மண்டலம், 2ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன் எடுத்துள்ளது.

* மேற்கு மண்டல அணிக்கு எதிரான துலீப் கோப்பை காலிறுதியில் வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 251 ரன் குவித்த நிலையில், மேற்கு மண்டலம் 187 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து, 64 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வடக்கு மண்டலம், 2ம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 107 ரன் எடுத்துள்ளது. ஆயுஷ் பதோனி 39 ரன், கேப்டன் கன்ஹையா வாதவான் 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 6 விக்கெட் இருக்க, வடக்கு மண்டலம் 171 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் மேற்கு மண்டல அணி கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது.