* பெங்களூருவில் நேற்று தொடங்கிய துலீப் கோப்பை காலிறுதியில், வட கிழக்கு மண்டல அணிக்கு எதிராக கிழக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 355 ரன் குவித்துள்ளது. சுதிப் குமார் கராமி 146 ரன் (185 பந்து, 25 பவுண்டரி, 1 சிக்சர்), குமார் குஷக்ரா 55 ரன் விளாசினர். சூரியவன்ஷி 8 ரன்னில் அவுட்டானார். ஷாபாஸ் அகமது 100* ரன், அனுகுல் ராய் 22* ரன்னுடன் களத்தில் உள்ளனர்.
* துலீப் கோப்பை தொடரின் மற்றொரு காலிறுதியில் மேற்கு மண்டல அணியுடன் மோதும் வடக்கு மண்டலம் முதல் இன்னிங்சில் 251 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (காம்போஜ் 60. பதோனி 51, தோஸ்ஜா 42, கம்ரான் இக்பால் 26). மேற்கு மண்டல பந்துவீச்சில் தணுஷ்கோடியன், துஷார் தேஷ்பாண்டே தலா 4 விக்கெட், முகேஷ் சவுதாரி, ஷர்துல் தாகூர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய மேற்கு மண்டலம் முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்துள்ளது.



