Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

சைலண்ட் மோடுக்கு போன மலராத கட்சி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

‘‘சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைக்கலாம் என பலாப்பழக்காரர் தனது ஆதரவாளர்களிடம் கருத்து கேட்ட விவகாரம்தான் தற்போது ஹாட் டாபிக்காமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியில் முதல்வர் பதவி என்ற உச்சப்பட்சம் வரை சென்று விட்ட பலாப்பழக்காரர், தற்போது மீண்டும் இலைக்கட்சியில் எப்படியாவது சேர்ந்து விடவேண்டும் என தவியாய் தவித்து வந்தார்.

ஆனால், சேலத்துக்காரர் மீண்டும் சேர்ப்பதில்லை என கறாராக இருப்பதால் ஏமாற்றமடைந்த பலாப்பழக்காரர் தனது அமைப்பை கழகமாக மாற்றிவிட்டார்.. இதை தொடர்ந்து சொந்த ஊரான ஹனிபீ மாவட்டத்திற்கு வந்த பலாப்பழக்காரர், இவ்வளவு சிரமத்திலும் தன்னை விட்டு பிரியாத நெருக்கமான ஆதரவாளர்களை தனித்தனியாக அழைத்து தேர்தல் கூட்டணி குறித்து கருத்து கேட்டாராம்..

அதில் சில கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைக்கலாமா? ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைக்கலாமா அல்லது நடிகரின் புதிய கூட்டணியில் சேரலாமா என கேட்டாராம்.. அதில் பலர் ஆளுங்கட்சி தரப்புக்கே ஆதரவாக பேச, உரிய நேரத்தில், தகுந்த முடிவை எடுப்போம் என கூறி சென்று விட்டாராம் பலாப்பழக்காரர்.. இதனால் தமிழக அரசியல் களம் கூடுதல் பரபரப்பு அடைஞ்சிருக்கு..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி காக்கி டிபார்ட்மெண்டில் நேர்மையான அதிகாரிக்கு சவால் வந்திருக்காமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகர காக்கி டிபார்ட்மெண்டில் இருக்கும் உச்ச அதிகாரி ரொம்பவே நேர்மையானவருன்னு சொல்றாங்க.. எந்த வழக்கையும் லேசாக எடுக்காம, குற்றத்தின் தன்மை என்ன என்பது உள்பட அடிவரை போய் அலசி ஆராய்ந்து வருபவராம்.. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்க மாட்டாராம் அந்த அதிகாரி.. இதற்கு ஒரு உதாரணத்தையும் காக்கிச்சட்டைக்காரங்க சொல்றாங்க...

காரிப்பட்டி ஏரியாவுல வயதான மூதாட்டி குடிசை வீட்டுக்குள்ளாற மர்மமா இறந்து கிடந்தாராம்... சம்பவ இடத்துக்கே போன அந்த அதிகாரி தீவிரமா விசாரிச்சியிருக்காரு.. ஒன்றரை பவுன் கம்மலை காணோம் என்ற தகவல் கிடைத்தவுடன் ரொம்பவே ஷாக்காயிட்டாராம்.. க்ரைம் வழக்கில் மர்டர் பார் கெயின் என்றால் பெரும் குற்றமாம்.. ஒருவரை கொலை செய்து கொள்ளையடிப்பது என்பது மன்னிக்க முடியாத தவறுன்னு உயர் அதிகாரிகளுக்கு தெரியுமாம்..

இதனால மாநகரில் அனுபவம் கொண்ட 10 அதிகாரிகளை தேர்வு செஞ்சி, களத்துல இறக்கி விட்டிருக்காரு.. எந்த துப்பும் கிடைக்காம இருந்த நிலையில், 3 கொலையாளிகளை அரஸ்ட் செஞ்சி ஜெயில்ல போட்டிருக்காரு... இதன் பிறகே அந்த உயர் அதிகாரிக்கு நிம்மதியா இருந்துச்சாம்.. இவ்வளவு நேர்மையான ஆபீசரின் ஏரியாவுக்குள்ளாற பெரும் ஓட்டை ஒன்று விழுந்த விவகாரம் உளவு பிரிவு எல்லோருக்கும் தெரிந்திருந்தாலும் அந்த நல்ல ஆபீசரின் காதுக்கு மட்டும் இன்னும் போகாம இருப்பது காக்கி சட்டைக்காரங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்காம்..

பட்டி என்ற பெயர் கொண்ட ஜெயில் பகுதியில் இருக்கும் ஸ்டேசன் ஏரியாவில் லேடி மர்டர் ஒன்று நடந்துச்சாம்.. லிவிங் டூ கெதர் முறையில் ரெண்டு சைல்டுகளின் தந்தை, லேடியுடன் தொடர்பில் இருந்திருக்காரு.. தன்னை மேரேஜ் செஞ்சிக்கோங்கன்னு அந்த லேடி கேட்டிருக்கு.. ஆனா அந்த நபரோ, அந்த லேடியை கொடூரமான முறையில் மர்டர் செஞ்சதாக போலீசார் கைது செஞ்சிட்டாங்க.. ஆனால் வீட்டில் இருந்த 50 பவுன் நகையை காணோமுன்னு லேடி தரப்பில் போலீசாராண்ட சொல்லியிருக்காங்க..

வீடு முழுவதும் நகை பெட்டியா கிடந்த நிலையில் அதில் இருந்த நகைகளை காணலையாம்... சிறையில் அடைக்கப்பட்ட அந்த நபரை நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து விசாரித்தால் உண்மை வெளிவரும் என்று ஆவலோடு எதிர்பார்த்திருந்த நிலையில் அந்த கட்டத்துக்கு ஆபீசர்ஸ் போகலையாம்.. சட்டஆலோசகர் கொடுத்த அறிவுரையால் அந்த முடிவை கைவிட்டுவிட்டதாகவும் சொல்றாங்க... அதே நேரத்தில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் தீவிரமா இருக்காங்களாம்..

என்ன சொல்லன்னு தெரியாமல் ஸ்டேசன் காக்கிக்சட்டைக்காரங்க மவுனமா இருக்காங்களாம்.. தினந்தோறும் மன இறுக்கத்துடனேயே வேலைக்கு வந்துபோறாங்களாம்... இந்த விவகாரத்தில் மேலதிகாரிகள் எல்லோரும் வாய்பொத்தி மவுனமாக இருக்கும் நிலையில் அந்த உயர் அதிகாரியின் காதுக்கு இந்த விவகாரம் எப்படி போகாமல் இருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்காம்... உண்மையை அந்த அதிகாரி சாக விட மாட்டார் என்ற நம்பிக்கையோடு காக்கிசட்டைக்காரங்களோடு உளவுப்பிரிவும் காத்திருக்காம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகரத்து மலராத கட்சியினர் ரொம்பவே சைலண்ட் மோடுக்கு சென்று விட்டாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்ட நிலையில் தூங்கா நகரத்து தொகுதியில் இலைக்கட்சி வேட்பாளரை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு சென்றதால் ஏற்பட்ட மகிழ்ச்சியை மலராத கட்சியினர் கொண்டாட முடியாமல் போய் விட்டார்களாம்..

தேர்தலுக்கு பின் இருகட்சிகளும் கூட்டணி சேர்ந்தாலும், இலைத்தரப்பினர் இவர்களை அவ்வளவாக கண்டுகொள்வதில்லையாம்.. இத்தோடு தங்களது கட்சியில் மாநில தலைமையும் மாறிய நிலையில், மாவட்டம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருக்காங்க.. இவர்கள், பெரும்பாலும் புதிய மாநில தலைவர் வந்த பிறகு நியமிக்கப்பட்டதால் பழைய நிர்வாகிகள் யாரும் இவர்களை கண்டுகொள்வதில்லையாம்..

ஒத்துழைப்பும் கொடுப்பதில்லையாம்.. இதனால், புதிய நிர்வாகிகள் ஆக்டிவாக செயல்பட முடியவில்லையாம்.. பழைய நிர்வாகிகளும் பெயரளவிற்கு தான் வந்து போகிறார்களாம்.. இதனால், மாவட்டம் முழுவதும் மலராத கட்சியினர் பலரும் சைலண்ட் மோடுக்கு சென்று விட்டார்களாம்.. இவர்களை நம்பி எப்படி தேர்தலை சந்திப்பது என சீட்டுக்காக காத்திருப்போர் புலம்ப ஆரம்பித்து விட்டனராம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.