Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Leader
search-icon-img
Advertisement

சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் அதிகாரி மற்றும் உதவியாளர்

பணியிடங்கள் விவரம்:

1. ஆராய்ச்சி அதிகாரி (சித்தா): 2 இடங்கள் (பொருளாதார பிற்பட்டோர்). வயது: 40க்குள். தகுதி: சித்த மருத்துவத்தில் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்று சித்தா கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

2. ஆராய்ச்சி உதவியாளர் (வேதியியல்): 2 இடங்கள் (பொது). வயது: 30க்குள். தகுதி: வேதியியல் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் 2 வருட பணி அனுபவம்.

3. மெடிக்கல் லேபரட்டரி டெக்னாலஜிஸ்ட் (எம்எல்டி): 9 இடங்கள் (எஸ்டி-1, பொது-3, பொருளாதார பிற்பட்டோர்-2, ஒபிசி-3)

4. லேபரட்டரி அட்டென்டெண்ட்: 1 இடம் (பொருளாதார பிற்பட்டோர்). வயது: 25க்குள். தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ccrs.ayush.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.03.2026.