கோவை: கோவை கடை வீதி போலீஸ் நிலையத்தின் முதல் தளத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் பிரிவில் கடந்த 6ம் தேதி இரவு 11.30 மணியளவில் பேரூர் ராமசெட்டிப்பாளையம், காமராஜர் நகரைச் சேர்ந்த ராஜன் (60) என்பவர் புகுந்து எஸ்.ஐ., அறை மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போலீசாரின் விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்தது.
பிரேத பரிசோதனைக்குப்பின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது சாவில் சந்தேகம் எதுவும் இல்லை என உறவினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே பணியில் கவன குறைவாக இருந்த காவலர் செந்தில்குமார் மற்றும் எஸ்.ஐ. நாகராஜ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். இதை தொடர்ந்து மாஜிஸ்திரேட் வெர்ஜினி வெஸ்டா போலீஸ் ஸ்டேசனில் ராஜன் தற்கொலை விவகாரம் குறித்து பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.