Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஓடும் பஸ்சில் இளம்பெண் முன் ஆபாச போஸ்: வாலிபர் கைது

திருவனந்தபுரம்: திருச்சூர் அருகே ஓடும் பஸ்சில் வைத்து இளம்பெண் முன் ஆபாச போஸ் கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். இவர் ஏற்கனவே இதேபோன்ற புகாரின் பேரில் கைதாகி சிறை சென்றவர் என்பது தெரியவந்தது. கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த 28 வயது இளம்பெண் சம்பவத்தன்று மலப்புரத்தில் இருந்து திருச்சூருக்கு கேரள அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு அருகே அமர்ந்திருந்த ஒரு வாலிபர் அந்த இளம்பெண் முன் ஆபாசமாக போஸ் கொடுத்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனே இதுகுறித்து திருச்சூர் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் ஆபாச போஸ் கொடுத்தது கோழிக்கோட்டை சேர்ந்த நவாஸ் (33) என்பது என தெரியவந்தது.இதைத் தொடர்ந்து போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நவாசிடம் விசாரணை நடத்தியபோது, அவர் ஏற்கனவே கடந்த இரு வருடங்களுக்கு முன்பும் இதேபோல ஓடும் பஸ்சில் பெண் பயணிகள் முன் ஆபாசமாக போஸ் கொடுத்ததாக கூறப்பட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.