Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கண்ணீர் ததும்ப வைக்கும் வயநாடு துயரம்.. நிலச்சரிவால் உருக்குலைந்த மக்களுக்கு உதவ ஆட்சியர் வேண்டுகோள்..!!

கேரளா: வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுமக்கள் உதவ வேண்டும் என்று வயநாடு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 45 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 3,069 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய 3 கிராமங்கள் மண்ணுக்குள் புதைந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கி தவிக்கும் மற்றும் உயிரிழந்தவர்களை பேரிடர் மீட்புக்குழு மற்றும் ராணுவத்தினரால் மீட்புப்பணிகள் 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தங்களால் இயன்ற நிதியை அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று பினராயி விஜயன் கூறியிருந்தார். இதையடுத்து

இந்நிலையில், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பொதுமக்கள் உதவ வேண்டும் என்று வயநாடு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளியுங்கள்..!!

Account Number: 67319948232

Name: Chief Minister's Distress Relief Fund

Bank: State Bank of India

Branch: City Branch, Thiruvananthapuram

IFSC: SBIN0070028

SWIFT CODE: SBININBBTOB

Account Type: Savings

PAN: AAAGD0584M

மேலும், போன் பே மற்றும் கூகுள் பே மூலமும் keralacmdrf@sbi நன்கொடை செலுத்தலாம்.

கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டு வயநாடு ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், வயநாடு நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்கள் மற்றும் மருத்துவமனையில் உள்ளவர்களின் நிலை குறித்த தகவல்களை அறிந்துக் கொள்ள 8078409770 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.