Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பெரும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு நிகழும் என்ற அச்சத்தில் கிரீஸ் நாட்டு தீவில் இருந்து வெளியேறிய சுற்றுலா பயணிகள்!!

ஏதென்ஸ் : பெரும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு நிகழும் என்ற அச்சத்தில் கிரீஸ் நாட்டு தீவில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறினர். கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான சான்டோரினி தீவு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாகும். ஜனவரி மாத இறுதியில் திடீரென சான்டோரினி தீவில் சரமாரியாக நிலநடுக்கங்கள் ஏற்படத் தொடங்கின. கடந்த 2 வாரங்களில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் சான்டோரினி தீவில் பதிவாகி உள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். சாண்டோரினி மற்றும் அருகிலுள்ள தீவுகளில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளன.

மேலும் ரிக்டரில் 3 ஆக பதிவான நிலநடுக்கங்கள் ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் பதிவானதால் எரிமலை வெடிக்கலாம் என மக்கள் அச்சம் அடைந்தனர். படிப்படியாக அதிகரித்த நிலநடுக்கத்தின் திறன் பிப்.6-ம் தேதி ரிக்டர் அளவுகோலில் 5.1-ஆக பதிவானது. இந்த நிலையில், சான்டோரினி தீவில் கிரீஸ் நாடு அவசர நிலையை பிரகடனம் செய்ததை அடுத்து அங்கிருந்து சுற்றுலா பயணிகள் வெளியேறினர். ஆயினும் அரசு மீட்புப் பணியாளர்கள், ட்ரோன்கள் மற்றும் மோப்ப நாய் ஆகியவற்றுடன் அவசர கால உதவிக்கு தயாராக உள்ளனர். மேலும் டிரோன்கள் மூலம் மக்கள் வசிப்பிடத்தை கண்காணித்து வருகின்றனர்.