Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்கா - ஈரான் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் அடுத்தவாரம் தொடங்கும்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தை மீண்டும் அடுத்தவாரம் தொடங்கும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்த நிலையில் திடீரென ஈரானின் அணுஉலைகள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதை தொடர்ந்து டிரம்ப்பின் எச்சரிக்கை காரணமாக இஸ்ரேல் ஈரான் இடையேயான போர் முடிவுக்கு வந்தது. இருப்பினும் தற்போதைக்கு அவர்கள் போரில் சலிப்படைந்து தாக்குதல் நிறுத்தி கொண்டாலும் எதிர்காலத்தில் மீண்டும் போரில் ஈடுபட வாய்ப்புள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். நெதர்லாந்தின் தி எர்த் நகரில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் இருநாள் மாநாடு நிறைவடைந்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப்.

அமெரிக்கா ஈரான் இடையிலான பேச்சுவார்த்தையை தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அடுத்தவாரம் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் கூறினார். அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈராநின் அணுஉலைகள் முழுமையாக அழிக்கப்பட்டு விட்டதாகவும் அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டால் மீண்டும் நிச்சயமாக தாக்குதல் நடத்துவோம் என்று டிரம்ப் தெரிவித்தார். இதனிடையே இந்தியா - பாகிஸ்தான் இடையேயென போரை வர்த்தகத்தை காரணம் காட்டி நிறுத்தியதாகவும் அவர் 18வது முறையாக கூறியுள்ளார். கடந்த வாரம் அமெரிக்கா வந்த பாகிஸ்தான் ராணுவ தளபதியிடம் இந்தியாவுடன் சண்டையிட்டால் தாங்கள் வர்த்தகம் செய்ய போவதில்லை என தான் தெரிவித்ததாகவும் அணு ஆயுதப்போரை நிறுத்தியதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.