கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 2 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர். தலைநகர் கீவை கூறிவைத்து ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை ட்ரோன்களை ஏவியது இதில் 27 இடங்களில் குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்தன ஒரு குழந்தை உட்பட 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர் காயம் அடைந்த 50 கும் மேற்பட்டோர் மருத்துவமணையில் அனுமதிக்க பட்டனர் ரஷ்யாவின் தாக்குதலுக்கு அஞ்சி பொதுமக்கள் புகுந்தகுழிகளில் தஞ்சம் அடைந்தனர்.