Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு கூடுதல் படைகளை அனுப்பிவைக்க வடகொரியா முடிவு?

ரஷ்யா: உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட கூடுதல் படைகளை ரஷ்யாவிற்கு வடகொரியா அனுப்பி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்திற்குள் ராணுவத்தினர் அனுப்பிவைக்கப் படுவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் ரஷ்யாவிற்கு தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருவதாக தென் கொரிய சட்டமன்ற உறுப்பினர்கள் வியாழக்கிழமை, உளவுத்துறை நிறுவனத்தை மேற்கோள் காட்டி தெரிவித்தனர்.

அதனுடன் ராணுவ தடவாளங்களும் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்க வடகொரியா முடிவு செய்துள்ளது. இதற்கு பதிலாக விண்வெளி திடமான தொழில்நுட்ப ஆலோசனைகளையும், ஏவுகணைகள் அமைப்புகள் தொடர்பான வழிகாட்டுதல்களையும் ரஷ்யாவிடம் இருந்து வடகொரியா பெற உள்ளது. வட கொரியாவும் ரஷ்யாவும் வட கொரிய துருப்புக்களை இடமாற்றம் செய்ததையும், குர்ஸ்க் பகுதியை மீண்டும் கைப்பற்றுவதற்காக உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் தாக்குதலில் அவர்கள் வகித்த பங்கையும் பகிரங்கப்படுத்தியுள்ளன.