Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-ல் செல்வது எப்படினு தவெக அரசிடம் தான் கத்துக்கணும்

சென்னை: தவெக ஆட்சியில் GST வருவாய் வளர்ச்சியில், தேசிய சராசரிக்கும் கீழே தமிழ்நாட்டின் வளர்ச்சி புதைக்கப்பட்டிருக்கிறது. எல்லாத் துறைகளிலும் இவ்வளவு வேகமாக Reverse Gear-ல் செல்வது எப்படி என இவர்களிடம் தான் கற்று கொள்ள வேண்டும் என தவெக அரசை திமுக தலைவர் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

இது தொடர்பாக தனது சமீபத்திய எக்ஸ் பதிவில் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய 1,614 கோடி ரூபாய் கொரிய முதலீடுகள் த.வெ.க. அரசின் அலட்சியத்தால் ஆந்திராவுக்குச் சென்றுவிட்டன. முதலீடுகளை ஈர்த்து தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த Guidance Tamil Nadu

அமைப்பே இந்த ஆட்சியில் தனிநபர்களின் ego-வுக்கு காவு கொடுக்கப்பட்டுவிட்டது.

இதுவெல்லாம் என்னவென்றே புரியாத, தெரியாத நம் முதலமைச்சரோ இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் கையசைத்து show காட்டக் கிளம்பிவிட்டார். "கடினமான காலங்களுக்கு தயாராகுங்கள். இந்த TVK ஆட்சியின் கீழ் தமிழ்நாடு அழிவைச் சந்திக்கும்" என்றும் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.