Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்; ஹமாஸ் பதிலடி: மோதல் முற்றுகிறது

வாஷிங்டன்: டிரம்ப் மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்று ஹமாஸ் பதிலடி கொடுத்துள்ளது. உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மோதல் முற்றும் நிலை உள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 6 வார போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதில், ஹமாஸ் வசமுள்ள 33 இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுகின்றனர். அடுத்த பணய கைதிகள் விடுவிப்பு வரும் 15ம் தேதி நடக்க உள்ளது. இதற்கிடையே, காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் ராணுவம் மீறி பாலஸ்தீனர்களை கொன்றதாகவும் மனிதாபிமான உதவிகளையும் தடுத்து நிறுத்துவதாகவும் குற்றம்சாட்டியது. இதனால் அடுத்தகட்ட பணய கைதிகள் விடுவிப்பு தாமதமாகும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘வரும் சனிக்கிழமைக்குள் அனைத்து பணய கைதிகளையும் ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் பயங்கர விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். போர் நிறுத்தம் ரத்து செய்யப்படும். இது எனது முடிவு. இதில் இறுதி முடிவெடுக்க வேண்டியது இஸ்ரேல்தான். நான் சொல்வதற்கு உடன்பட வேண்டியது இஸ்ரேல் கையில் உள்ளது. காசா மக்களை எடுத்து கொள்ள ஜோர்டான், எகிப்துக்கு அழுத்தம் தரப்படும். இல்லாவிட்டால் அவர்களுக்கு தரும் அமெரிக்க நிதி உதவியை நிறுத்துவேன். காசாவை அமெரிக்கா கைப்பற்றி அதை ரியல் எஸ்டேட் மையமாக்குவேன்’ என்றார்.

ஏற்கனவே பாலஸ்தீனத்தில் விடுதலைக்காக போராடி வரும் ஹமாஸ் குழு, அமெரிக்காவிற்கு எதிராக அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளது.

அதன்படி, ‘அமெரிக்காவின் மேற்பார்வையில் இஸ்ரேலுடன் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்க முடியாது’ என்று ஹமாஸ் அறிவித்துள்ளது. அதாவது, போர் நிறுத்த ஒப்பந்தங்களை ஏற்க மாட்டோம். பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கோரிக்கையின் பேரில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம். போர் நிறுத்தத்துக்கு வாய்ப்பே இல்லை. ஹமாஸ் சிறைபிடித்துள்ள இஸ்ரேல் படைகளை விடுதலை செய்தால் போர் நிறுத்தம் செய்வோம் என அமெரிக்காவின் வாக்குறுதியின் அடிப்படையில் இஸ்ரேல் பேச்சுவார்த்தை செய்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை முடிவுகளை ஏற்க முடியாது. இஸ்ரேல் மீது கண்டிப்பாக போர் தொடுப்போம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது.