Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தில் சென்னையை சேர்ந்தவர்கள் 3 பேர் தற்கொலை

கோவை: கோவை நஞ்சுண்டாபுரத்தை அடுத்த வெங்கிட்டாபுரம் அருகே நேற்று தண்டவாளத்தின் அருகே கிடந்த 3 பேர் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். 3 பேரின் உடல் கிடந்த இடத்தின் அருகே ஒரு பை கிடந்தது.

அந்த பையை கைப்பற்றி, உயிரிழந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினார்கள். அதில் சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த வரலட்சுமி (45), அவருடைய மகன் யுவராஜ் (16), மகள் ஜனனி (15) என்பது தெரியவந்தது. கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட 3 பேரும் நேற்று காலை போத்தனூர் ரயில் நிலையம் வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் 3 பேரும் போத்தனூர் ரயில் நிலையத்தில் இருந்து தண்டவாளம் வழியாக நடந்து சென்று, வெங்கிட்டாபுரம் அருகே வந்த போது அந்த வழியாக வந்த ரயில் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் 3 பேருமே ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. குடும்ப பிரச்னையா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.