திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
திருவள்ளூர்: திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில், முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் திமுக தலைவருமான கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா திருநின்றவூரில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சரும் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் தலைமை தாங்கினார்.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நடுகுத்தகை கே.சுரேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் பிரபு கஜேந்திரன், அப்துல் மாலிக், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆர்.செந்தாமரை, ஜிசிசி.கருணாநிதி, வி.ஜே.உமாமகேஸ்வரன், அக்னி மா.செ.ராஜேஷ், தெ.பிரியா குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு, கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். விழாவில், மாநில ஆதிதிராவிடர் நல அணி செயலாளர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட செயலாளர்கள் டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ, திருத்தணி எஸ்.சந்திரன் எம்எல்ஏ தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ, நடுக்குத்தகை கே.ஜெ.ரமேஷ் மாவட்ட அவைத்தலைவர் ம.ராஜி, திருநின்றவூர் நகர செயலாளர் தி.வை.ரவி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.


