Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஊட்டி அருகே நடுரோட்டில் கடமானை வேட்டையாடிய புலி

ஊட்டி: ஊட்டி அருகே புலி ஒன்று கடமானை நடுரோட்டில் வேட்டையாடி இழுத்து சென்ற சம்பவம் கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. லகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள மாயார், மசினகுடி, மாவனல்லா, பொக்காபுரம் உள்பட சுற்று வட்டார கிராமப்பகுதிகள் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ளது. இக்கிராம பகுதிகளில் சமீப காலமாக புலிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சமயங்களில் பகல் நேரங்களிலேயே புலிகள் சாலைகளை கடந்து செல்வதையும், கிராமத்திற்குள் புகுந்து மாடுகளை வேட்டையாடுவதையும் காண முடிகிறது.

இந்நிலையில், மாயாறு கிராமத்தில் உள்ள செல்வப்பா காலனி அருகே சுற்றித்திரியும் ஒரு புலி கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் குடியிருப்பு பகுதிக்கு அருகில் வந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. நேற்று முன்தினம் மாலை மாயார் கால்வாய் பகுதியில் பதுங்கி இருந்த அந்த புலி, கிராமத்தின் முன் உள்ள பாலத்தின் அருகே கடமானை வேட்டையாடியது. அப்போது அந்த வழியாக சென்ற வாகனத்தை கண்டு செய்வது அறியாமல் திகைத்த புலி, பின்னர் அந்தக் கடமானை கால்வாயில் அருகே இருந்த புதருக்குள் இழுத்து சென்றது. இதனைக்கண்ட கிராம மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர்.