Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழப்பு..!!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். தஞ்சாவூரில் மாவட்ட நீதிபதியாக பணிபுரிந்து வருபவர் பூரண ஜெய ஆனந்த். இவர் நேற்றைய தினம் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றுவிட்டு இன்று அதிகாலையில் தஞ்சாவூர் நோக்கி செல்லும் வழியில் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே மாத்தார்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அங்கு எதிரே சென்ற லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.

இதில்,காரை ஓட்டிய வாசு ராமநாதன், காரில் பயணம் செய்த காவலர் கவின்குமார் மற்றும் கோர்ட் ஊழியர் மதன் குமார் மற்றும் தனஜ் ஜெயந்த் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இதில் பயணம் செய்த மாவட்ட நீதிபதி பூரண ஜெயந்த் படுகாயமடைந்தார். இவரை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து மேலும், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மாத்தார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.