Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருத்துறைப்பூண்டி அருகே சாலை தடுப்பு மீது மோதிய அரசுப் பேருந்து: 5 பேர் படுகாயம்

திருவாரூர்: திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி சென்ற அரசு பேருந்து 25 பயணிகளுடன் சென்றுள்ளது. இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி அரசு பேருந்து வந்து கொண்டிருந்த போது திருத்துறைப்பூண்டி புறவழிச்சாலை பகுதியில் உள்ள செண்டர் மீடியம் பகுதியில் வந்த போது அந்த பேருந்து நிலை தடுமாறி நேரடியாக செண்டர் மீடியனில் மோதியுள்ளது. இதில், பேருந்தில் பயணித்த பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர அளித்து வருகின்றனர். குறிப்பாக அரசு பேருந்து செண்டர் மீடியனில் மோதிய போது அங்கிருந்த பொது மக்கள் நேரடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த ஆம்புலன்ஸ் மூலமாக அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக திருத்துறைப்பூண்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.