Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழக அகழாய்வு நிதி குறைப்பு மார்க்சிஸ்ட் எம்பி கண்டனம்

மதுரை: தமிழ்நாட்டில் அகழாய்வு பணிகளுக்கான நிதி குறைக்கப்பட்டதற்கு மதுரை மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்தார். இது குறித்து அவர் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: இந்திய தொல்லியல் துறை கடந்த 5 ஆண்டுகளில் அகழாய்வுப் பணிகளுக்கான மொத்த நிதியில் 25 சதவீதத்தை (ரூ.8.53 கோடி) குஜராத்தில் மட்டும் செலவிட்டுள்ளது.

அதிலும் 94 சதவீதத்தை பிரதமர் மோடி பிறந்த ஊரான வாட்நகரில் மட்டும் செலவிட்டுள்ளது. இதே காலத்தில் தமிழ்நாட்டிற்கு செலவழிக்கப்பட்டுள்ளது வெறும் 9.8 சதவீதம் மட்டுமே. நேற்று வரை `வாட்நகர் நாயகனாக’ இருந்துவிட்டு இன்று `கங்கை கொண்டானாக’ மாறிவிட்டதாக நம்ப சொல்கிறார்கள். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.