விழுப்புரம்: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், ட்ரோன் இயக்க பயிற்சி வரும் 24.04.2025 முதல் 26.04.2025 தேதி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 5..00 மணி வரை கலந்தாய்வு அரங்கம், பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி (UCEV), விழுப்புரம் 605103 மாவட்டத்தில் நடைபெற உள்ளது.
இப்பயிற்சியில் ட்ரோன்கள் மற்றும் விவசாய பயன்பாடுகள்
- ட்ரோன் தொழில்நுட்பத்தின் அடிப்படைகள்
- ட்ரோன் செயல்பாடுகளில் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு
- உரிமத் தேவைகள் மற்றும் செயல்முறை
- விவசாயத்தில் ட்ரோன் பயன்பாடுகள்
- ட்ரோன் துணைக்கருவிகள் மற்றும் பராமரிப்பு பற்றிய கண்ணோட்டம்
நடைமுறை ட்ரோன் பயிற்சி (வெளிப்புற களப் பயிற்சி)
- ரிமோட் கண்ட்ரோலரைப் புரிந்துகொள்வது
- அடிப்படை பறக்கும் திறன்கள்
- உருவகப்படுத்தப்பட்ட விவசாய காட்சிகள்
- ஆய்வுக்காக பயிர்களின் மீது பறப்பது
- நேரடிப் பயிற்சி
மேம்பட்ட கருத்துக்கள் மற்றும் சான்றிதழ்
- பெரிய அளவிலான செயல்பாடுகளைத் திட்டமிடுதல்
- ட்ரோன் சேவை தொழில்முனைவோர் அறிமுகம்
இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in
அரசு சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவு அவசியம்: www.editn.in மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள். 9080130299, 9080609808


