Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் மாவட்ட வருவாய் அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் உத்தரவு

சென்னை: மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு அளித்துள்ளார். மருத்துவப் பணிகள் கழக பொது மேலாளர் உமா மகேஸ்வரி, மயிலாடுதுறை மாவட்ட வருவாய் அலுவலராக நியமித்துள்ளார். ஈரோடு ஆவின் பொது மேலாளர் ரா.கவிதா, தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக பொதுமேலாளராக ஜெ.பார்த்தீபன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பரந்தூர் மண்டலம்-3 [நில எடுப்பு] தனி மாவட்ட வருவாய் அலுவலராக பா.அருண் சத்யாவை நியமனம் செய்துள்ளனர். கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கம் பேருந்து நிலைய தலைமை நிர்வாக அலுவலராக பால் பிரின்ஸ்ஸி ராஜ்குமார் நியநியமிக்கப்பட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை கோயில் நிலங்கள், தனி அலுவலராக பா.பூங்கொடி நியமிக்கப்பட்டுள்ளார்.