Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த சதி.. ஆன்மிக மாநாடு என்ற பெயரில் அரசியல் மாநாடு நடத்துகிறது பாஜக: பெ.சண்முகம் பேட்டி!!

சென்னை: மதுரையில் ஆன்மிக மாநாடு என்ற பெயரில் அரசியல் மாநாடு நடத்துகிறது பாஜக என்று மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

பாஜக கூட்டணியை தோற்கடிப்பதில் மாற்றம் இல்லை: பெ.சண்முகம்

பாஜக - அதிமுக கூட்டணியை தோற்கடிப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. பாஜக - அதிமுக கூட்டணியை தோற்கடிப்பதற்கான வலிமை திமுக கூட்டணியிடம்தான் உள்ளது என்றார்.

கூடுதல் தொகுதி கேட்பது எங்கள் விருப்பம்: பெ.சண்முகம்

கூடுதல் தொகுதி கேட்பது எங்கள் விருப்பம்; திமுகதான் அதை முடிவுசெய்யும். திமுக தலைமை நிச்சயமாக பொருத்தமான முடிவை எடுக்கும். முருக பக்தர்கள் மாநாட்டை பயன்படுத்தி பெரிய கலவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். மதுரையில் ஆன்மிக மாநாடு என்ற பெயரில் அரசியல் மாநாடு நடத்துகிறது பாஜக. ஆன்மிக போர்வையில் நடக்கும் பாஜகவின் அரசியல் மாநாடு என கூறினார்.

தமிழ்நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த சதி: பெ.சண்முகம்

தமிழ்நாடு அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் அணுக வேண்டும். எந்தவித அசம்பாவிதம் நிகழாமல் மாநாடு நடக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழடி அகழாய்வு அறிக்கையை மாற்றி கொடுக்க வேண்டும் என ஒன்றிய அரசு நினைப்பது ஏற்கத்தக்கது அல்ல என அவர் தெரிவித்தார்.