Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் மீது உக்ரைன் அதிரடி தாக்குதல்

மாஸ்கோ: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் மீது உக்ரைன் நேற்று மிகப்பெரிய டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மாநாடு நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் அதிபர் புதின் இன்று உரையாற்ற உள்ளார். இந்நிலையில், இந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகர் மீது உக்ரைன் திட்டமிட்டு திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் எல்லையிலிருந்து 1000 கி.மீ. தூரம் பயணித்த டிரோன்கள், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தாக்கின.

இதனால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு கரும்புகை சூழ்ந்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில், ரஷ்யாவின் பால்டிக் கடற்படை கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ள குரோன்ஸ்டாட் கடற்படை தளமும் சேதமடைந்துள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக புல்கோவோ சர்வதேச விமான நிலையம் 6 மணி நேரம் மூடப்பட்டது. முன்னதாக உக்ரைன் தலைநகரமான கீவ் மீது ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக

உயர்ந்தது.