Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள 925 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: போக்குவரத்துத்துறை அறிவிப்பு

சென்னை: பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்ள 925 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத் துத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலமாக 27/06/2025 (வெள்ளிக்கிழமை) முகூர்த்தம், 28/06/2025 (சனிக்கிழமை) 29/06/2025 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு,

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து

திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 20, 21 தேதிகளில் 595 பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து

திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 27, 28 தேதிகளில் 110 பேருந்துகள் இயக்கப்படும்.

சென்னை மாதாவரத்திலிருந்து

27, 28 ஆகிய தேதிகளில் 20 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். மேலும். ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.