காஞ்சிபுரம்: சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்க கூடிய செம்பரம்பாக்கம் ஏரியில் தினம்தோறும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு சென்னை மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை வழியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லக்கூடிய கரையானது உள்ளது. இந்த பகுதியில் அந்த வழியாக சென்ற சிறுவர்கள் அங்கு ஒரு மனித எலும்பு கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெருவித்தனர்.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அங்கே இருக்கும் எலும்பு கூடை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர் மேலும் தடவியல் நிபுணர்கள் சோதனைக்கும் வந்து பரிசோதனை செய்தனர். தற்போது இறந்து போனவரின் வயது சுமார் 30 வயது என தெரியவந்தது மேலும் அவர் உள்ளாடை மட்டும் அணிந்து இருப்பதால் ஏரியில் குளிக்க வரும் போது நீரில் மூழ்கி இறந்து போனாறா? அல்லது கொலை செய்யபட்டு உடலை இங்கே வீசினார்களா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
தற்போது அவரின் உடலில் பல்லில் சிகிச்சைக்காக கம்பி கட்டி இருப்பது தெரியவந்தது. இதை அடையாளமாக வைத்து இறந்து போன நபர் யார் என்று குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சமீப காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்து புகார்கள் ஏதேனும் உள்ளதோ அதில் கண்டுபிடிக்காமல் இருப்பவரை பட்டியலையே போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இவர் இறந்து சுமார் 20 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த உடல் முழுவதும் அழுகி எலும்பு மட்டுமே காட்சியளித்து வருகிறது. தொடர்ந்து இந்த இறந்து போன நபர் யார் என்பது குறித்து நசரத்பேட்டை போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செம்பரம்பாக்கம் ஏறி கரையில் மனித எலும்பு கூடு எடுக்க பட்ட சம்பவம் இந்த பகுதியில் பேரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.