Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சிவகங்கையில் ரயில்வே மேம்பாலத்தில் சென்ற பஸ்சில் திடீர் தீ: 50 பயணிகள் உயிர் தப்பினர்

சிவகங்கை: சிவகங்கையில் ரயில்வே மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்த தனியார் பஸ் என்ஜினில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பஸ்சில் இருந்த 50 பயணிகளும் உடனடியாக கீழே இறக்கப்பட்டதால் உயிர் தப்பினர்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் இருந்து மதுரைக்கு நேற்று தனியார் பஸ் சென்றுகொண்டிருந்தது. பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். டிரைவர் முத்துக்குமார் பஸ்சை ஓட்டினார். சிவகங்கையில் உள்ள ரயில்வே மேம்பாலம் மீது சென்றபோது பஸ் என்ஜினில் இருந்து திடீரென புகை வெளியானது. இதனால் டிரைவர் மற்றும் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாலத்தின் ஓரத்தில் பஸ் நிறுத்தப்பட்டது.

பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக கீழே இறக்கிவிடப்பட்டனர். அடுத்த சிறிது நேரத்தில் என்ஜினில் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏறப்பட்டது. இது குறித்து உடனடியாக சிவகங்கை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பஸ் என்ஜினில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதையடுத்து பயணிகள் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர், தீப்பிடித்த பஸ் அகற்றப்பட்டதால் நிலைமை சீரானது.