Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நடிகர்கள் போதைக்கு அடிமையாக மனைவிகளே காரணம்: பாடகி சுசித்ரா பகீர் பேட்டி

சென்னை: போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா சிக்கியுள்ளனர்.

இது குறித்து பாடகியும் நடிகையுமான சுசித்ரா கூறியது:

ஸ்ரீகாந்த்துக்கு இப்போது திடீர் ரசிகர்கள் முளைத்திருக்கிறார்கள். அவர் இத்தனை வருடங்களாக திரைத்துறையில் வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் இருந்தபோது இவர்கள் எங்கே போயிருந்தார்கள்? குழந்தையை கவனிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஸ்ரீகாந்த் அழுகிறார். ஆனால் கொக்கைன் அடிக்கும் பொழுது மகன் நினைப்பு வரவில்லையா? தமிழ் திரையுலகில் பலர் இந்த கொக்கைன் போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள்.

திரைத்துறையை பொறுத்தவரை போதைப் பொருட்களை பயன்படுத்தும் எவரும் ரத்த பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டார்கள். ஷாருக்கானின் மகனுக்கு கூட ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதா? என்பது தெரியவில்லை. மும்பை போன்ற இடங்களில் இருந்து சில கௌரவ வேடங்கள், ஐட்டம் பாடல்களுக்கு நடிக்க வரும் நடிகர்கள் போதைப் பொருள் கலாச்சாரத்தை தமிழ் திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர். மும்பையில் எல்லாம் காலையில் பல் விளக்குவது போல நாங்கள் இதை பயன்படுத்துவோம் என்று சொல்லி அவர்கள் இந்த கலாச்சாரத்தை திரைத்துறைக்குள் புகுத்திவிட்டனர். மும்பையில் இருந்து வரும் நடிகர்கள் வெறும் நடிப்பதற்காக மட்டும் இங்கு வருவதில்லை. அங்கிருந்து வரும் நடிகர்கள் இங்கு எதை வேண்டுமானாலும் செய்துவிட்டு மும்பைக்கு திரும்பி விடுகிறார்கள். அவர்களைப் பற்றி இங்கு யாருமே பேசுவது கிடையாது.

இதையெல்லாம் நான் ஆதாரங்கள் இல்லாமல் பேசுவதில்லை. நான் ஊடகத்துறையில் பணியாற்றிய போது இது குறித்து செய்திகள் வரும். ஆனால் இதையெல்லாம் வெளியிட முடியாத சூழல் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் யூடியூப், சமூக வலைதளங்கள் இருப்பதால் காந்த் செய்திகள் வேகமாகப் பரவுகின்றன. திரைத்துறையில் இருக்கும் அனைவரையும் இது போல் நாம் குற்றச்சாட்டி விட முடியுமா என்று கேட்டால் அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று தான் நம்மால் கூற முடியும். எனக்கும் கொக்கைன் பயன்படுத்துவதற்கு அருகில் வரை வாய்ப்புகள் வந்தது, ஆனால் நான் வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். கலப்பட கொக்கைன் ஒரு கிராம் ரூ.12,000-க்கும், ஒரிஜினல் கொக்கைன் ரூ.65,000 வரை விற்பனையாகிறது.

சென்னையில் உள்ள அனைத்து மதுபான விடுதிகள், பப்களில் இது சாதாரணமாக நடக்கிறது. சென்னையில் இருக்கும் மதுபான விடுதிகளில் கழிவறைக்குச் சென்று பலரும் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர். 1 கிராம் கொக்கைன் பயன்படுத்த ஒரு 30 வினாடிகள் போதும். ‘கங்குவா’ படத்தில் கூட ஒரு காட்சியில் சூர்யா அதை சித்தரித்திருப்பார். அந்த காலத்தில் இருந்த நடிகைகள் குடிப்பழக்கத்தில் இருந்த தங்களது கணவர்களை மீட்டு எடுத்ததை பார்த்திருப்போம் ஆனால் இந்த காலத்தில் நடிகர்கள் மனைவிகளே ஊற்றிக் கொடுப்பதும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதும் வெள்ளி தட்டுகளில் போதைப்பொருட்களை வைத்து கோலம் வரைந்து கொண்டு வருவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நீங்கள் கூகுளில் சென்று கொக்கைன் பயன்படுத்துவதன் பக்க விளைவுகளை தேடிப் பாருங்கள். அந்தப் பக்க விளைவுகளுடன் எந்த நடிகர்களின் தோற்றம் ஒத்துப் போகிறதோ அவர்கள் எல்லாருமே கொக்கைன் பயன்படுத்துகிறார்கள். இதுவரை தான் என்னால் சொல்ல முடியும். இதற்கு மேல் அவர்களின் பெயர்களை எல்லாம் என்னால் சொல்ல முடியாது. இவ்வாறு சுசித்ரா கூறினார்.