Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிக்கிமில் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

கேங்டாக்: கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாட்டென் மற்றும் லாச்சங் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிக்கிமில் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேரை காணவில்லை.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான சிக்கிம், திரிபுரா, மணிப்பூர், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடந்த 29ம் தேதி முதல் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிக்கிமில் பெய்து வரும் கனமழையால் டீஸ்டா நதியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக சாட்டென் மற்றும் லாச்சங் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 9 வீரர்கள் காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் ராணுவ முகாமில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 ராணுவ வீரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.