Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பாலியல் குற்றவாளி என்று என்னை அவமானப்படுத்துவதா?சீமான் பேட்டி

சென்னை: என் மீது புகார் கொடுத்துள்ள விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. என்னை பாலியல் குற்றவாளி என்று அவமானப் படுத்துகிறார்கள் என சீமான் பேசினார்.சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

என்னை பாலியல் குற்றவாளி என்று சொல்கிறார்கள், வழக்கு விசாரணையில் இருக்கும்போது என்னை எப்படி குற்றவாளி என கூற முடியும், என்னை அசிங்கப்படுத்த வேண்டும் என்கிற எண்ணத்திலேயே தொடர்ச்சியாக அவதூறு பரப்பி செயல்பட்டு வருகிறார்கள். என் மீது புகார் கொடுத்துள்ள விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது.

கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸ் கட்சியும் ஒட்டுண்ணி போல ஒட்டிக் கொண்டு இரண்டு மூன்று சீட்டுகளுக்காக எதைப் பற்றியும் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சிகளை பொறுத்தவரையில் எந்த மக்கள் பிரச்சனைக்கும் அவர்கள் குரல் கொடுக்காமல் மவுனம் சாதித்து வருகிறார்கள். மீனவர் பிரச்சனைக்கும் ஆசிரியர்கள் பிரச்னை என எந்த பிரச்னைக்கும் அவர்கள் குரல் கொடுப்பதே இல்லை.மும்மொழி கொள்கையில் இரண்டு கட்சிகளின் நிலைப்பாடு என்ன, என்பதை அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

எந்த பிரச்னைக்கும் குரல் கொடுக்காமல் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியின் வாயில் புண் இருக்கிறதா, இல்லை புற்று பாதித்துள்ளதா. இப்படி இருந்து கொண்டு என்னை பற்றி பேச அவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. கம்யூனிஸ்டுகள் இன்றைய காலகட்டத்தில் கார்ப்பரேட்டுகளாக மாறிவிட்டார்கள் என்பதையே அவர்களின் செயல்பாடுகள் காட்டுகிறது. அண்ணா பல்கலைக்கழக பாலியல் விவகாரத்தில் போராட்டத்தில் ஈடுபட முயன்ற என்னையும் சவுமியா அன்புமணியையும் குஷ்புவையும் முன்கூட்டியே கைது செய்தனர். அரசின் தவறை தட்டி கேட்கும் போராட்டம் அது என்பதாலேயே அதற்கு அனுமதிக்கவில்லை. இவ்வாறு சீமான் கூறினார்.

முன்னதாக தூத்துக்குடி விமானநிலையத்தில் சீமான் பேட்டி யளிக்கையில்,”விஜயலட்சுமி நான் பாலியல் தொழிலாளியா என்று கேட்டுள்ளார். எனக்கு முன்னாடி இதே மாதிரி நாலைந்து பேரிடம் பழகுவது, அதற்குப் பின்பு வெளியே போய் வம்படியாக வழக்கு தொடுப்பது, மிரட்டி பணம் கேட்பது என்று இருந்தால் அதற்கு பேர் என்ன?. அதிகபட்சம் அவர் வைத்த கோரிக்கை எங்கண்ணனிடம் போய் மாசம் ரூ.30 ஆயிரம் கொடுத்து என்னை மெயின்டெய்ன் பண்ணிக்க கோரிக்கை வைத்தார்” என்று கூறினார்.

* வீடியோவில் கதறிய விஜயலட்சுமி

‘நடிகை விஜயலட்சுமி ஒரு பாலியல் தொழிலாளி. அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது’ என்று சீமான் நேற்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதற்கு கண்ணீர் மல்க நடிகை விஜயலட்சுமி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் பாலியல் தொழிலாளியா? நான் பாலியல் தொழிலாளியாடா நாயே... டேய் இன்னாள் வரைக்கும் நீ தப்பிச்சி இருப்படா... இந்த நொடியில் இருந்து நீ எப்படி செருப்பால் அடி வாங்க போறேன்னு பாரு... நான் பாலியல் தொழிலாளின்னா எங்க அக்காவ வெச்சுட்டு இப்படி தவிச்சுக்கிட்டு கிடப்பேனா... நாசமா போவடா... நீ நாசமா போவடா... என்னுடைய கண்ணீர் உன்னை என்ன பண்ண போகுதுனு பாரு...’ என்று கண்ணீர் மல்க நடிகை விஜயலட்சுமி கூறி உள்ளார்.