Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த விவகாரத்தில் முக்கிய ஏஜெண்டை கைது செய்தது போலீஸ்

சென்னை: 17 வயதுடைய 25க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த விவகாரத்தில் முக்கிய ஏஜெண்டை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். இவர் சென்னை மட்டுமின்றி புறநகர் மாவட்டங்களில் தங்கி அங்கு ஏஜெண்டாக செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

வளசரவாக்கம் பகுதியில் என்ஐஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிலர் அப்பகுதியில் விபச்சார தொழிலில் ஈடுபட்டு வந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதில் ராமச்சந்திரன் என்ற 71 வயதான முதியவரை அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நதியா என்ற பெண் பாலியல் புரோக்கர் கைது செய்யப்பட்டார்.

அவர் தன்னுடைய மகளையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும், மேலும் ஆசை வார்த்தைகளை கூறி, மூளை சலவை செய்து மகளின் பள்ளி மாணவிகளையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது.

இந்த வழக்கில் ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த முக்கிய ஏஜெண்டான விஜயலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இவருடன் வேறு யாருக்கெல்லாம் இந்த வழக்கில் தொடர்புள்ளது என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.