Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும்: தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தகவல்

சென்னை: மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும் என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்துள்ளார். வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வட தமிழ்நாடு, அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியில் நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு என்பதால் இன்று முதல் 18-ம் தேதி வரையில் தமிழ்நாட்டிற்கு மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் இன்று முதல் 3நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கர்நாடகாவில் நாளை முதல் 2 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும் என னியார் வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் தகவல் தெரிவித்தார். அதில்,

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்துள்ளது, குறிப்பாக தென் சென்னையில் சற்று கூடுதலாகவே மழை பதிவு. அடுத்த 2 மணி நேரத்தில் (பகல் 12 மணி வரை) ஒரு சில இடங்களில் சீரான மழையும், சில இடங்களில் விட்டு விட்டும் மழை பெய்யக்கூடும். ஈசிஆர் , ஓ எம் ஆர், பகுதிகளில் மழை நின்ற பிறகு வட சென்னையில் மழை பொழிவு குறையும். மீண்டும் இன்று இரவு முதல் நாளை காலை வரை மழை தொடரும். பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழையை எதிர்பார்க்கலாம் இவ்வாறு தெரிவித்தார்.