Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எனது ரேஸ் ஆசைக்கு பெற்றோர் சொன்ன அட்வைஸ்: அஜித் குமார் உருக்கமான பேட்டி

சென்னை: பொருளாதார பிரச்னை காரணமாக தனது கார் ரேஸ் ஆசைக்கு பெற்றோர் சொன்ன அட்வைஸ் குறித்து நடிகர் அஜித் குமார் உருக்கமாக பேசியிருக்கிறார். அவரது பேச்சு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.  சினிமா, கார் ரேஸிங் என்று தன்னை பிசியாக வைத்திருக்கும் அஜித் குமார், சமீபத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் இருந்து பத்ம பூஷண் விருது பெற்றார். சினிமாவில் நடித்தபோது அடிக்கடி பேட்டி கொடுத்த அவர், சில வருடங்களாக மீடியாவிடம் பேசாமல் ஒதுங்கியிருக்கிறார்.

தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அவர், அடிக்கடி பேட்டி கொடுக்கிறார். சமீபத்தில் அஜித் குமார் அளித்த பேட்டி வருமாறு:

நான் முதன்முதலில் பைக் ரேஸிங்கை தொடங்கினேன். ஏனெனில், அது மிகவும் மலிவானது. எனக்கு ஆதரவாக பெற்றோர்கள் இருந்தனர். அந்தவகையில் நான் ஒரு பாக்கியசாலி. ஆனால் என் தந்தை மிகவும் நேர்மையாக, ‘அஜித், இது அதிக செலவை உண்டாக்கும் விளையாட்டு.

எங்களால் உனக்கு ஆதரவளிக்க முடியாமல் போகலாம். ஆனால், நீ உன் ஸ்பான்சர்களை கண்டுபிடித்து, அதற்கு ஒரு வழி கண்டால் முன்னேறு’ என்று சொன்னார். நான் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு எனது பெற்றோர்கள் ஒரு விஷயத்தில் தெளிவாக இருந்தனர். அவர்கள் சொல்லும்போது, ‘படித்து முடித்து ஒரு பட்டம் வாங்க வேண்டும். இல்லை என்றால், ஏதாவது ஒரு வேலைக்கு செல்ல வேண்டும். நேரத்தை மட்டும் வீணடிக்க கூடாது’ என்றனர். அப்போதுதான் நான் வேலை செய்வதை தேர்ந்தெடுத்தேன்.இவ்வாறு அஜித் குமார் கூறியுள்ளார்.