Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

சென்னை பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு பலி ..!!

சென்னை: சென்னை குரோம்பேட்டை, பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 பேர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். பொன்னேரியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சேலத்தைச் சேர்ந்த சேகர் (40), சுப்பிரமணி (50) விரைவு ரயில் மோதி பலியாகினர். சென்னை குரோம்பேட்டையில் ரயிலில் அடிபட்டு பிரணவ் (23), சதீஷ் (39) ஆகியோர் உயிரிழந்தனர்.

சேலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பொன்னேரி அடுத்த தச்சூரில் தங்கி புதிய கட்டிடத்தில் பெயிண்டிங் பணி செய்து வந்தனர். பெயிண்டிங் வேலை முடிந்ததை அடுத்து 4 பேர், சொந்த ஊருக்கு செல்ல பொன்னேரி ரயில் நிலையத்திற்கு வந்தனர். 4 தொழிலாளர்களில் 2 பேர் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.