Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வு ஜன.21, 27ல் நடைபெறும்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

சென்னை: யுஜிசி நெட் தேர்வு ஜன.21, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமையினால் யுஜிசி நெட் தேர்வு கலை மற்றும் அறிவியல் என 85 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை ஆகியவற்றுக்கான தகுதி தேர்வாக ஆண்டிற்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் விண்ணப்பங்கள் டிசம்பர் 11ம் தேதி வரை பெறப்பட்டது.

இதற்கான தேர்வுகள் ஜனவரி 3ம் தேதி தொடங்கி ஜனவரி 16ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இந்த நாட்களில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை வருவதால் தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்வர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் இன்று நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது. தொடர்ந்து, ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வரும் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவித்துள்ளது. மற்ற விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ugcnet.nta.ac.in.) தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் யூஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடல்

சென்னை: மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் யூஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது என முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார். யூஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: யூஜிசி நெட் தேர்வுகளை வேறொரு நாளுக்கு மாற்றிட வேண்டும் என்று ஒன்றியக் கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். தற்போது அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருப்பது சரியான முடிவு! தமிழ்ப் பண்பாட்டுத் திருநாட்களின்போது முக்கியத் தேர்வுகள் நடைபெறும் என ஒன்றிய அரசு அறிவிப்பதும், மாநில அரசின் தலையீட்டுக்குப் பின்னர் அது ஒத்திவைக்கப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இனியாவது நாட்டில் செயல்படும் எந்தவொரு அமைப்பும், நமது நாட்டின் பன்முகத்தன்மையையும் - இங்கு வாழும் அனைத்துத் தரப்பு மக்களின் உணர்வுகளையும் மதித்து முடிவுகளை எடுப்பார்கள் என நம்புவோம்!