புதுச்சேரியில் அனைத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை செயல்படும் :மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவிப்பு
புதுச்சேரி : பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சான்றிதழ் பெற வசதியாக அனைத்து தாலுகா அலுவலகங்களும் சனிக்கிழமை செயல்படும் என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன் விவரம் பின்வருமாறு.
வருகின்ற 2025-26 கல்வியாண்டிற்கான பள்ளி மற்றும் கல்லூரி சேர்க்கை பருவத்தை முன்னிட்டு, குடியிருப்பு, வருமானம் மற்றும் சாதி சான்றிதழ்களுக்கு விண்ணப்பங்கள் பெருமளவில் பெறப்பட்டு வருகின்றன. இதனால் மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் தாலுகா அலுவலகங்களில் சான்றிதழ்கள் பெறும் போது சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இந்த நிலையில், மாணவர்களின் விண்ணப்பங்கள் சரியான நேரத்தில் பரிசீலிக்கப்பட்டு, தேவையான சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய, புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலகங்களும் மாணவர்களுக்காக மட்டும் 24.05.2025, 31.05.2025 மற்றும் 07.06.2025 ஆகிய சனிக்கிழமைகளில் செயல்பட உள்ளன.
மேலே குறிப்பிட்டுள்ள நாட்களில் வட்டாட்சியர் / தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பதாரர்களுக்கான இருக்கை, குடிநீர் போன்ற தேவையான ஏற்பாடுகள் செய்ய அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
4. மாணவர்களின் நலனுக்காகவும், கடைசி நேரத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. எனவே, மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
