Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பாமக எம்.எல்.ஏ.க்கள் மருத்துவமனையில் அனுமதி: பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி பேச்சு

சென்னை: பாமக நிறுவனர் ராமதாசுக்கும், அன்புமணிக்கு இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல் நடந்து வருகிறது. இதற்கிடையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் சேலத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பரபரப்புக்கு இடையே, இன்று பாமக முக்கிய தலைவர்கல் செய்தியர்களுக்கு பேட்டியளித்தனர். சென்னையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது;

பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி:

அன்புமணி கூட்டத்தில் பங்கேற்காமல் இருக்கவே பாமக எல்எல்ஏக்கள் மருத்துவமனையில் அனுமதியா? என்ற கேள்விக்கும் ராமதாஸ், அந்த நேரத்தில் அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருக்கலாம் என கூறினார். பாமக-வில் ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு திமுக காரணம் என அன்புமணி கூறியது அப்பட்டமான பொய். அன்புமணி மாவட்டந்தோறும் பொதுக்குழு கூட்டம் நடத்துகிறாரே? என்று கேட்கிறீர்கள். அவரவர் அவரவர் வேலையை செய்கின்றனர் என்றார். மேடையில் மன்னிப்பு கேட்ட அன்புமணி நேரில் கேட்க வேண்டும் என நினைக்கிறீர்களா? என்று செய்தியாளர்கள் ராமதாஸிடம் கேட்டனர். இதற்கு ராமதாஸ், போகப்போகத் தெரியும் என்று பாட்டு பாடி பதில் அளித்தார்.

பாமக அன்புமணி ராமதாஸ் பேச்சு:

சேலத்தில் நடைபெற்று வரும் பாமக மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; நெஞ்சுவலி காரணமாக பாமக எம்.எல்.ஏ.க்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாமக எம்எல்ஏக்கள் ஜி.கே.மணி, அருள் இருவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்றார். மேலும், இருவரும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் குணமடைய கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என அன்புமணி கூறினார்.

பாமக எம்.எல்.ஏ. சதாசிவம் பேட்டி:

தான் ஜாதகம் பார்த்து விட்டதாகவும், இன்னும் ஒரு மாதத்தில் பாமகவில் நிலவி வரும் குழப்பம் தீர்ந்து தந்தையும், மகனும் இணைவார்கள் என அக்கட்சியின் எம்.எல்.ஏ. சதாசிவம் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விரைவில் தீர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.