Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வித்தியாசமான சவாலை எதிர்கொள்ளும் பிலிப்பைன்ஸ் நாடு.. கொசுவை பிடித்துத் தந்தால் சன்மானம் என அறிவிப்பு..!!

மணிலா: பிலிப்பைன்ஸில் கொசுவை உயிருடனோ அல்லது கொன்றோ தந்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் மண்டலியோங் நகருக்கு உட்பட்ட அடிஷன் மலைக் கிராமத்தில், கடந்த 2 மாதங்களில் 42 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு பாதித்த 2 மாணவர்கள் உயிரிழந்தது அந்நாட்டை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிலிப்பைன்சில் இந்த ஆண்டில் மட்டும் 28,234 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் இது 40 சதவீதம் அதிகமாகும்.

இந்நிலையில், பிலிப்பைன்ஸ் தலைநகரில் பரவிவரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நூதன முயற்சி மேற்கொண்டுள்ளது. அதில், பொதுமக்கள் கொசுவை உயிருடனோ, கொன்றோ கொண்டுவந்து தந்தால் 5 கொசுவுக்கு ரூ.1.50 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 5 கொசுக்களை, உயிருடனோ, கொல்லப்பட்ட நிலையிலோ பிடித்துக் கொடுத்தால், இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு ரூபாய் 50 காசுகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதனால், உற்சாகம் அடைந்த உள்ளூர் மக்கள், கொத்துக் கொத்தாக கொசுக்களைப் பிடித்துக் கொண்டு, பணம் பெறுவதற்கு படையெடுக்கத் தொடங்கினர்.