அமிர்தசரஸ்: காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, சிந்து நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்தல் மற்றும் குறுகிய கால விசாக்களில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஒன்றிய அரசு தீவிரமாக உள்ளது. இதன்படி பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பாகிஸ்தானை சேர்ந்த அப்துல் வாஹீத் (69), கடந்த 17 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வந்தார்.
அவர் காலாவதியான விசாவுடன் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்புவதற்காக ஜம்மு காஷ்மீர் போலீசார், நகரில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசுக்கு அழைத்து வந்தனர். அவரை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்காக ஏற்பாடுகள் செய்து அழைத்து செல்வதற்கு முன் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்’ என்றார்.
