Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பஹல்காம் தாக்குதல் எதிரொலி.. காஷ்மீரின் முன்னணி நாளிதழ்கள் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு எதிர்ப்பு!!

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26பேர் பலியானதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் முன்னணி நாளிதழ்கள் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் மலையில் அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் முன்னணி நாளிதழ்கள் தங்களது முகநூல் பக்கங்களை கருப்பு நிறத்தில் அச்சிட்டு செய்திகளை வெளியிட்டுள்ளனர். துயரத்தில் மூழ்கிய காஷ்மீர் போன்ற தலைப்புகளோடு வெளியான நாளிதழ்கள், மனிதாபிமானமற்ற தாக்குதல்களுக்கு காஷ்மீர் மக்களின் ஒட்டுமொத்த கண்டனத்தை பிரதிபலித்தன. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்தன. மேலும், சுற்றுலா தளங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், பயங்கரவாதத்தை ஒலிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நாளிதழ்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.