Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உதகை மலர்க்கண்காட்சியை இதுவரை 1.84 லட்சம் பேர் கண்டு களித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவிப்பு

நீலகிரி: உதகை மலர்க்கண்காட்சியை இதுவரை 1.84 லட்சம் பேர் கண்டு களித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.11 நாட்கள் நடைபெற்ற மலர்க்கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 1.84 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

நீலகிரி கோடை விடுமுறையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் 127-வது மலர் கண்காட்சியை 15ம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மலர் கண்காட்சியை காண பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கண்காட்சியில், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் 40 ஆயிரம் வண்ண மலர் மாடங்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும், மலர் கண்காட்சியில் பல்வேறு வகையிலான மலர்கள் இடம்பெற்றன. இதை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த மலர்க்கண்காட்சி நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் மலர்க்கண்காட்சியை இதுவரை 1.84 லட்சம் பேர் கண்டு களித்துள்ளதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது.