Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஊட்டி அருகே கரடி நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

ஊட்டி: ஊட்டி அருகே கிராமத்தில் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டி அருகே உள்ள லவ்டேல் கெரடா கிராமத்திற்குள் கரடி ஒன்று நேற்று பிற்பகல் புகுந்தது. அது உணவுதேடி அலைந்து கொண்டிருந்தது. பின்பு அங்கிருந்த ஒரு வீட்டின் மாடி மீது ஏறி அங்கும் இங்குமாக உலாவிக் கொண்டிருந்தது. இதனைக்கண்ட பொதுமக்கள் கூச்சலிட்டதால் கரடி அங்கிருந்து அடர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது.

இதேபோல் ஊட்டி சுற்றுவட்டாரத்தில் பல்வேறு கிராமங்களில் குடியிருப்பு பகுதிகளில் பகல் நேரங்களிலே கரடி அடிக்கடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் குடியிருக்கும் பகுதிக்குள் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.