Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad cements
search-icon-img
Advertisement

கடந்த ஒரு வாரத்தில் போதைப் பொருளுக்கு எதிரான சிறப்பு சோதனை: 58 பேர் கைது: 61 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை: 7 நாட்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு எதிராக நடத்திய சோதனையில் 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 7 நாட்களில் 31 வழக்குகள் பதியப்பட்டு 61.42 கிலோ கஞ்சா . 5,789 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர். நடப்பாண்டில் 133 குற்றவாளிகள் போதைப் பொருள் வழக்கில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னையில் 7 நாட்களில் போதைப் பொருள் விற்றதாக 31 வழக்குகள் பதியப்பட்டு, 58 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 61.42 கிலோ கஞ்சா, 60 கிராம் போதைப் பொருள், 5789 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.