Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

ஒலிம்பிக் திருவிழாவையொட்டி களைகட்டியது பாரீஸ் நகரம்: இந்தியா சார்பில் 117 வீரர்கள் களம் காண்கின்றனர்

பாரீஸ்: 2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடனும், கோலாகலத்துடனும் நாளை தொடங்க உள்ளது. உலகமே பெரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் மிக பெறும் விளையாட்டு திருவிழா. வளர்ச்சி அடைந்த நாடுகள், வளரும் நாடுகள், பின்தங்கிய நாடுகள் என போட்டிபோட்டு களமிறங்கும் ஆடுகளம் இது. ஒவ்வொரு வெற்றியிலும் மார்தட்டிக்கொள்ளும் அளவிற்கு பெருமை சேர்க்கும் பதக்கங்கள் இவை அனைத்தையும் ஒன்றிணைகிறது ஒலிம்பிக்.

2024ம் ஆண்டுக்கான பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 26ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒலிம்பிக் திருவிழாவையொட்டி பாரீஸ் நகரமே கலைக்கட்டியுள்ளது. 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக பிரேக் டான்ஸ் எனப்படும் நடன போட்டியும் இணைக்கப்பட்டுள்ளது. நடன கலைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

32 விளையாட்டு போட்டிகளில் 329 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும் நிலையில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 10,500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் களம் காண்கின்றனர். இந்தியா சார்பில் 16 போட்டிகளில் மொத்தமாக 117 வீரர் வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ரா உள்பட தடகள போட்டிகளில் 27 பேர் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரவீன் சித்திரவேல், சந்தோஷ் தமிழரசன், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேசன்,வித்தியா ராமராஜ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா பதக்கங்களை வென்று சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.