Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நாதக பொதுக்கூட்டத்தில் கியூஆர் கோடுடன் உண்டியல் வசூல்

கோவை: கோவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் உண்டியலில் கியூஆர் கோடு ஒட்டப்பட்டு திரள்நிதி வசூல் செய்யப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. கோவை கொடிசியா திடலில் நாம் தமிழர் கட்சி சார்பில் தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சி தொண்டர்களிடம் திரள்நிதி திரட்டப்பட்டது.

இதற்காக தனித்தனியாக உண்டியல்கள் தயார் செய்யப்பட்டு கட்சி நிர்வாகிகள் தொண்டர்களின் இருக்கைக்கு சென்று திரள்நிதி வசூல் செய்தனர். அப்போது திரள்நிதி வழங்குவதற்கு வசதியாக உண்டியலை சுற்றிலும் கியூஆர் கோர்டு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தது. இதை செல்போனில் ஸ்கேன் செய்த தொண்டர்கள் திரள்நிதியை செலுத்தினர். உண்டியலில் கியூஆர் கோடு ஸ்டிக்கர்கள் ஒட்டி திரள்நிதி வசூல் செய்ததை அக்கட்சியை சேர்ந்த சிலர் செல்போனில் வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதோடு பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.