Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட மனநல அவசர சிகிச்சை மற்றும் மீள் மையம், 86 லட்சம் ரூபாயில் நோயுற்ற பச்சிளம் குழந்தைகளை தாயுடன் ஒன்றிணைத்து தீவிர பராமரிப்பு அளித்து விரைவில் குணமடைய வைக்கும் பிரிவு, 16 லட்சம் ரூபாயில் துணை இனப்பெருக்க மையம் முதல் நிலை, 60 லட்சம் ரூபாயில் வளர்ச்சி குறைபாடான குழந்தைகளுக்கு குரோத்ஹார்மோன், 50 நபர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த ஆண்டுகளில் நடத்தப்பட்ட மனநல ஆலோசனைகள் பெரிய அளவில் உதவியாக இருந்தது.2021 முதல் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும்போது இந்த ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. நீட் தேர்வெழுதிய 1,35,715 பேரில் 76,781 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வில் தவறியோர் மனம் தளராமல் மீண்டும் படிப்பைத் தொடர வேண்டும். மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோருக்கும் 104 என்ற எண்ணில் ஆலோசனை தரப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.