Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: கிழக்கு மாவட்ட செயற்குழுவில் அமைச்சர் சா.மு.நாசர் உறுதி

பொன்னேரி: திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில், வரும் 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திருவள்ளூர் மாவட்ட 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அந்த வெற்றிக் கனியை தளபதியின் கரங்களில் ஒப்படைப்போம் என்று அமைச்சர் சா.மு.நாசர் உறுதியளித்தார். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில், மீஞ்சூர் அருகே நாலூரில் நேற்று மாலை மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மாவட்ட கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் சா.மு.நாசர் பேசுகையில், ஏற்கெனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்திலேயே முதலிடமாக திருவள்ளூர் மாவட்டம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், வரும் 2026ம் ஆண்டும் சட்டமன்றத் தேர்தலில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, அதன் வெற்றி கனியை தளபதியின் கரங்களில் ஒப்படைப்போம். மேலும், யாரை வேட்பாளராக திமுக தலைமை கழகம் அறிவித்தாலும், அனைத்து கட்சி நிர்வாகிகளும் அயராமல் உழைத்து, அவர் வெற்றிவாகை சூடவேண்டும். தளபதி எப்படி இரவு பகல் பாராமல் தன்னை வரித்துக் கொண்டு உழைக்கிறாரோ, அதேபோல் நாம் அனைவரும் வரும் சட்டமன்றத் தேர்தலில் அயராமல் உழைத்து, மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைய பாடுபட வேண்டும் என்று உறுதியுடன் அறிவுறுத்தினார்.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் மூர்த்தி, மாநில நிர்வாகிகள் பாஸ்கர்சுந்தரம், சி.எச்.சேகர், ஸ்டாலின், ஒன்றிய செயலாளர்கள் காணியம்பாக்கம் ஜெகதீசன், முரளிதரன், செல்வசேகரன், கி.வே‌.ஆனந்தகுமார், மணிபாலன், பரிமளம் சந்திரசேகர், சக்திவேல், அவைத்தலைவர் ஆ.ராஜா,பொன்னேரி நகர செயலாளர் ரவிக்குமார், பொன்னேரி நகராட்சி தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மாவட்ட தலைவர் பகலவன், நிர்வாகிகள் சுப்பிரமணி, பா.செ.குணசேகரன், வெங்கடாஜலபதி, ரமேஷ், ரவி, இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், பழவை முகமது அலவி, ஆசானபூதூர் சம்பத்குமார், பொன்னேரி தீபன் அத்திப்பட்டு எம்டிஜி.கதிர்வேல், எம்டிஜி.வடிவேல், காட்டுப்பள்ளி சேதுராமன், நந்தியம்பாக்கம் கலாவதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.