Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

குறைவாக இருக்கும் நீர்மட்டம்.! ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்படுமா?

மேட்டூர்: நீர்மட்டம் குறைவாக இருப்பதன் காரணமாக வரும் ஜூன் 12-ஆம் தேதி ஏற்கனவே திட்டமிட்டபடி மேட்டூர் அணையை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் காவிரி பாசனத்தை சார்ந்திருக்கும் மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் அணையின் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும், கர்நாடக மாநிலத்தில் இருந்து போதிய அளவு தண்ணீர் திறக்கப்படாததாலும் இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். அணையின் இருப்பு 50 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதுடன், தென்மேற்குப் பருவமழை சற்று தாமதமாக துவங்கி இருப்பது மற்றும் கர்நாடகத்திடமிருந்து உரிய பங்கீட்டு நீர் கிடைக்காதது போன்றவற்றை இந்த ஆண்டு தண்ணீர் திறப்பு தள்ளி போக கூடும் என அதிகரிகள் கூறுகின்றனர். இதனிடையே காவிரி டெல்டா பாசன பகுதிகளில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் தேவை அதிகமாக உள்ளதால், நீர் இருப்பு நிலவரத்தை பொறுத்து தமிழக அரசு உரிய முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.